திண்டுக்கல் : திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.M.S.முத்துச்சாமி,IPS., அவர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லைகளை இணைக்கும் போடி மெட்டு பகுதியில் உள்ள சோதனை சாவடியில் தமிழக மற்றும் கேரள காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,IPS., அவர்கள் மற்றும் போடி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.பார்த்திபன் அவர்களும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
மேலும் போடி மெட்டு பகுதியில் வாழும் கிராம மக்களை நேரில் சந்தித்து மழை காலங்களில் இயற்கைப் பேரிடர்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும், கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி கிராம மக்களுக்கு இலவச முகக்கவசங்கள் வழங்கி நிறை குறைகளை கேட்டறிந்தார்.