தேனி: தேனி மாவட்டம் போடி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 -ஆம் ஆண்டு தன் மகளை காணவில்லை என போடி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போடி நகர் காவல் நிலையம் குற்ற எண் 2718/2020 Girl Missing வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது,
விசாரணையில் கிருஷ்ணன் என்பவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி, குழந்தை திருமணம் செய்து பாலியல் உறவு கொண்டது தெரியவந்ததையடுத்து போடி நகர் காவல் நிலைய குற்ற எண் 2718/2020 U/s Girl Missing @366 IPC,9 of CHILD MARRIAGE ACT 2006 and 4 of POCSO ACT 2012 மாற்றம் செய்யப்பட்டு குற்றவாளி 30.10.2020 கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு, வழக்கானது விசாரணையில் இருந்து வந்த நிலையில் இவ்வழக்கின் இறுதி அறிக்கை 20.12.2020 அன்று தாக்கல் செய்யப்பட்டு மேற்படி இவ்வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கின் இறுதி விசாரணை 28.03.2024-ம் தேதியன்று தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பொறுப்பு கூடுதல் மாவட்ட நீதிபதி திரு.V.கணேசன்,B.A,BL.,LLB, அவர்கள் போடி நகர் காவல் நிலைய காவல்துறையினரால் அளிக்கப்பட்ட தக்க சாட்சியங்களின் அடிப்படையில் கிருஷ்ணன் என்பவர் குற்றவாளி என சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதி செய்து 366 இதச படி 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அபராதம் ரூபாய் 10,000 ம் அபராதத்தை கட்ட தவறினால் 1ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், மேலும் 2019 ஆம் ஆண்டு குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் ( திருத்தம்) சட்டப்பிரிவு4(2)ன் கீழான குற்றத்திற்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் அபராத தொகையாக ரூபாய் 10,000/- விதித்தும் அபராதத்தை கட்டத் தவறினால் 1 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், மேலும் 2006 ஆம் ஆண்டு குழந்தைகள் திருமண தடைச் சட்டம் பிரிவு 9 கீழான குற்றத்திற்கு 1 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் திறம்பட வாதுரைத்த அரசு தரப்பு வழக்கறிஞர் திரு.M.விவேகானந்தன்,Bsc.BL., அவர்களையும், சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகளையும், இந்த வழக்கில் சாட்சியங்கள் ஆஜர்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட நீதிமன்ற முதல் நிலை காவலர் (267)- திரு.T.ரவிக்குமார் அவர்களையும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்,இ.கா.ப., அவர்கள் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.