தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான ஆறுமுகநேரி, நடராஜன் நகரை சேர்ந்த நிக்கோலஸ் லியான் மகன் ஜோசப் ஆரோக்கியசாமி 58. என்பவரை இன்று (11.02.2025) திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.