திருநெல்வேலி:கடந்த 2018 -ம் ஆண்டு இருக்கன்துறை, வண்ணார்குளத்தை சேர்ந்த சின்னதுரை 37 என்பவர் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பழவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியான சின்னதுரை மீது வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இவ்வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி திரு. சுரேஷ்குமார் அவர்கள் வழக்கை விசாரித்து போக்சோ வழக்கின் குற்றவாளியான சின்னதுரையை 5 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 11,000/- ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த பழவூர் காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.சிலம்பரசன்., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.