திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மூவாநல்லூர், அமரபாக்கம், நடுதெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் மலைகள்ளன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேற்படி நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், பரிந்துரை செய்ததின் பேரில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின் படி (11.12.2023) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் நடப்பாண்டில் (2023) கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட 17 நபர்களும், கஞ்சா மற்றும் புகையிலை குற்றம் தொடர்பாக 03 நபர்களும், சட்ட ஒழுங்கு வழக்குகளில் தொடர்புடைய 41 நபர்கள் மற்றும் பாலியல் குற்ற வழக்கில் 06 நபர் (மொத்தம் 67 நபர்கள்) மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக அத்துமீறலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri).,*அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.