திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல் செய்த கன்னிவாடி, தெத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜதுரை 19. என்பவரை போக்சோ வழக்கில் வத்தலகுண்டு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திரு. அ.பிரதீப்., இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிலைமணி அவர்கள், நீதிமன்ற தலைமைக் காவலர் திருமதி.கனி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி. மைதிலி அவர்களின் சீரிய முயற்சியால் இன்று 11.03.2024-ம் தேதி திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி ராஜதுரை என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை 12 போக்சோ வழக்குகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா