திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சிறுமியை கடந்த 2022 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்த ராஜதுரை என்பவரை வத்தலகுண்டு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் மாவட்ட எஸ்.பி. திரு. பிரதீப் அறிவுறுத்தலின் பேரில் வத்தலகுண்டு காவல் துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி ராஜதுரைக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா