திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூன்றரை வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த – ராமதாஸ், த.பெ. புருஷ்லி @ சுந்தரமூர்த்தி, குடியான ஆற்றங்கரை தெரு, வாஸ்திராஜபுரம், திருவாரூர் என்பவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவ்வழக்கில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணைக்கு பின் (25.03.2025) -ராமதாஸ், த.பெ.புருஷ்லி @ சுந்தரமூர்த்தி, குடியான ஆற்றங்கரை தெரு, வாஸ்திராஜபுரம், திருவாரூர் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை (ம) ரூபாய்.ரூ.10,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த காவல் ஆய்வாளர் மற்றும் வழக்கு தொடர்பான நீதிமன்ற அலுவல் பணியை சிறப்பாக செய்த நீதிமன்ற காவலர் ஆகியோரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண்கரட், இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.















