தென்காசி : தென்காசி மாவட்டம்,அய்யாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு 17 சிறுமியை கற்பழித்த தன்னூத்து காலனி தெருவை சேர்ந்த முனியாண்டி என்பவரின் மகனான கண்ணன் 26/22 என்ற நபர் மீது அப்போதைய பணவடலிசத்திரம் காவல் ஆய்வாளர் திருமதி. ராணி, அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.
இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணையானது நெல்லை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் (29.07.2022) வழக்கை விசாரணை செய்த நீதிபதி செல்வி.அன்புசெல்வி அவர்கள் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் திறம்பட செயல்பட்ட அரசு வழக்கறிஞர் அவர்களுக்கும் அய்யாபுரம் காவல்துறையினருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.