திருவாரூர்: மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளம் சிறுமியை காதலிப்பதுபோல் நடித்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கின் குற்றவாளிக்கு திருவாரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.8000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை மேற்கொண்ட காவல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற காவலரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள்.
















