கோவை: நெல்லித்துறை பகுதியில் ஒரு தோட்டத்தில் உள்ள வீட்டில் 14 வயது சிறுமி வேலை செய்து வந்தார். இந்த சிறுமியின் சித்தப்பா முருகேசன். இவர் தினமும் குடித்துவிட்டு வந்து சிறுமியிடம் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு வைத்துள்ளார்
. மேலும் சிறுமி வேலை செய்யும் இடத்தில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்துவந்த சம்பத் என்பவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதில் இந்த சிறுமி 2 மாத கர்ப்பம் ஆனார் .இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் அன்னம் வழக்கு பதிவு செய்து சம்பத் ,சிறுமியின் சித்தப்பா முருகேசன் ஆகியோரை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.