சென்னை: சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் வசித்து வரும் 12 வயது சிறுமி கடந்த 06.12.2021 அன்று இரவு வீட்டினருகே கடைக்கு சென்றுவிட்டு திரும்பும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சிறுமியை வழிமறித்து நிறுத்தி, பேச்சு கொடுத்துக் கொண்டே பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமி சத்தம் போடவே, அந்த நபர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். மேற்படி சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில், W-8 திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
W-8 திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து,
மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சரவணன் 30. முகப்பேர் மேற்கு என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றவாளி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்