சென்னை : அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சிறுமிகள் இருவர் அவர்களின் வீட்டின் அருகில் உள்ள ரமேஷ், வ/49 என்பவரின் வீட்டிற்கு கடந்த 22.05.2021 அன்று விளையாட சென்ற போது ரமேஷ் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக மேற்படி சிறுமிகள் இருவரும் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் மேற்படி இரண்டு சிறுமிகளின் பெற்றோர் இன்று (10.06.2021) W-30 பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
W-30 பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட ரமேஷ், வ/49, காட்டுப்பாக்கம் என்பவரை போக்சோ சட்டத்தில் இன்று (10.06.2021) கைது செய்தனர். மேலும் அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.