சென்னை: மாதவரம் காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியரின் 14 வயது சிறுமி, கடந்த 04.05.2020 அன்று முதல் காணவில்லை என்று அவரது பெற்றோர் M-2 மாதவரம் பால்பண்ணை காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் கொடுத்ததின் பேரில் சிறுமி காணவில்லை என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
M-2 மாதவரம் பால்பண்ணை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில் மேற்படி 14 வயது சிறுமி அடிக்கடி கறி வாங்க சென்ற போது, கறிக்கடையில் வேலை செய்து வந்த அரவிந்த கிருஷ்ணா, வ/24 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அரவிந்த கிருஷ்ணா மேற்படி 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளதும், தற்பொழுது இருவருக்கும் ஒரு மாத கைக்குழந்தை உள்ளதும் தெரியவந்தது.
எனவே மேற்படி வழக்கு W-33 மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, 14 வயது சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்திய அரவிந்த கிருஷ்ணா, வ/24, பெரம்பூர் என்பவரை போக்சோ சட்டத்தில் 08.06.2021 அன்று கைது செய்தனர். மேலும் அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.