நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் நகர போலீஸ் சரகத்திற்குட்பட்ட கோட்டை வாசல்படி பகுதியில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இயங்கி வருகிறது. காக்கழனி நுகத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் 28. தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். விடுதியில் தங்கி படிக்கும் 5 மாணவர்களுக்கு இரவு நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்கள் நேற்று முன்தினம் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.சந்தானமேரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ஆறுமுகத்தை கைது செய்தனர்.