திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16.05.2020 அன்று 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரைத் தொடர்ந்து நிலைய ஆய்வாளர் திரு.ஏசு ராஜசேகரன் அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார்.இதில் சிறுமி கடத்தப்பட்டது என்பதும், கடத்திய நபர் சிறுமலை பகுதியைச் சேர்ந்த குழந்தைசாமி என்பவரென தெரியவந்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 14 வயது மதிக்கத்தக்க சிறுமி தனது பாட்டி வீட்டிற்கு சென்று திரும்பும்போது அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன்(24) என்பவர் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிலைய ஆய்வாளர் திருமதி. பூர்ணிமா அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த முருகேசனை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா