கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மகன் குமணன் (22), இவருக்கும், பிளஸ்-2 படிக்கும் (16) வயதுடைய மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் அந்த மாணவி 3 மாத கர்ப்பமடைந்தார். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.புவனேஸ்வரி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து குற்றவாளி குமணணை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.