சென்னை: இணைய வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்துகொள்வோர் மீது “ போக்சோ ” சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாணவ , மாணவிகள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க ஒரு Helpline எண் உருவாக்கவும் இணைய வகுப்புகள் குறித்து வரும் புகார்களை மாநிலத்தின் கணினி குற்றத் தடுப்புக் ( Cyber crime ) காவல் பிரிவில் காவல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர் உடனடியாக பெற்று சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.