திருநெல்வேலி: திருநெல்வேலி வி.எம். சத்திரம், தெற்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கியப்பன் (19). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். விசாரணையில், இசக்கியப்பன் அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த விவரம் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இசக்கியப்பன் மீது போக்சோ வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















