பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் 19, . என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ச.மணி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
மேற்படி பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் திருமதி. ஸ்ரீ வெங்கட பிரியா இ.ஆ.ப அவர்கள் (10.09.2021) தேதி மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மேற்படி குற்றவாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.ஜெயசித்ரா மற்றும் த.கா 1864 திருமதி.செல்வராணி ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் பெரிதும் பாராட்டினார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.