அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்¸ தலைக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மரக்கன்று மற்றும் இனிப்பு வழங்கி பாராட்டினர். மேலும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து காவலர்கள் தலைகவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். காவல்துறையினரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.