திருப்பத்தூர் : கடந்த (31.07.2022), அன்று மாலை திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து தலைமை காவலர் திரு.முருகானந்தம், அவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மிகச் சிறப்பாக செயல்பட்டு போக்குவரத்தை சீர் செய்தார். இக்காவலரின் சிறப்பான பணியை பாராட்டும் விதமாக (02.08.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்கள் காவலரை நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.