செங்கல்பட்டு அடுத்த பெருங்களத்தூர் வண்டலூர் ஜி எஸ்டி சாலையில் சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்த பேட்டரி கார் ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்தது.
வாகனத்தில் பயணித்தவர்கள் வண்டி பற்றி எரிவதை துரிதமாக கவனித்து தப்பித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போக்குவரத்து காவலர்கள் வாகனத்தில் இருந்தவர்களை பாதுகாப்பாக இருக்கும் படி செய்துவிட்டு போக்குவரத்து நெரிசலை துரிதமாக சரி செய்தார்.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து காவலர்களின் இச்செயலை கண்டு பாராட்டினார்கள்.
செங்கல்பட்டில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அன்பழகன்