வேலூர் : வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் செல்லும் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் காமராஜர் பாலம் வழியாக மட்டுமே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் நேற்று முன்தினம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஆட்டோ, லாரி, டிராவல்ஸ் ஓட்டுனர்கள், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் திரு. குமாரவேல் பாண்டியன், தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.ராஜேஷ் கண்ணன், குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், அமலுவிஜயன் எம்.எல்.ஏ., துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.ராமமூர்த்தி, நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தர்ராசன், ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், தாசில்தார் விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்