திருவள்ளூர் : மீஞ்சூர் அரியன் வாயல் பகுதி போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி. குறிப்பாக காலை மாலை வேலைகளில் தினம் நெரிசலால் பொதுமக்கள் மிகந்த சிரமம் அடைந்த நிலையில் அதற்கு நிரந்தர தீர்வு காண பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். மீஞ்சூர் காவல் ஆய்வாளர்.திரு காளிராஜ் மற்றும் துணை ஆய்வாளர் ஐசக் ஆகியோர் இதில் தனி கவனம் செலுத்தி இன்று ஆட்டோ ஒட்டுநர்கள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஊர் பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்ளாட்சி. மக்கள் பிரதிநிதிகள் இணைந்து ஆய்வு கூட்டத்தை நடத்தினர். இதில் இரண்டு ஆட்டோக்கள் மட்டும் போக்குவரத்துக்கு நெரிசல் இல்லாமல் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் நிறுத்துவது. காலை மாலை வேலைகளில் காவலர்கள் நியமிப்பது. பேருந்து நிறுத்தம் மாற்றம் செய்வது, கடைகளுக்கு வரும் இருசக்கர வாகனங்களை முறைப்படுத்துவது கனரக வாகனங்கள் முறைப்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மீஞ்சூர்ல பேரூராட்சி துணை தலைவர் அலெக்சாண்டர் வார்டு உறுப்பினர் அபுபக்கர் கம்யுனிஸ்ட் தோழர் கதிர்வேல் அரியன் வாயில் ஜமாத் நிர்வாகிகள் அக்பர் பாரூக் மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு தலைவர் ராஜேந்திரன் துணை தலைவர் வேல்ராஜ் தி.மு.க அரியன் வாயல் கிளை செயலாளர் அணஸ் சமூக ஆர்வலர் குரு சாலமோன் ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஒட்டுநர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு