திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக விபத்துக்கள் நடைபெறுவது குறித்து ஆய்வு செய்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் நடைபெறுவதாகவும், விபத்தை தடுக்க உயர்கோபுர மின்விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்கை விளக்குகள் அமைக்க வேண்டுமென அறிவுறுத்தினார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் சீரிய முயற்சி மற்றும் தொடர் நடவடிக்கையால், திருவாரூர் மாவட்ட எல்லையான கானூர் சோதனைச்சாவடி முதல் கோவில்வெண்ணி சோதனைச்சாவடி வரை E.G.S.pillay கல்வி நிறுவனங்கள் சார்பாக தலா ரூ.95,000/- மதிப்பிலான 32 தானியங்கி (T-வடிவ) போக்குவரத்து சமிக்கை விளக்குகள் அமைக்கப்பட்டு (25.09.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது.
அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் விபத்துக்களை தவிர்க்க அனைவரும் கட்டாயம் போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அப்போது, திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.P.மணிகண்டன் மற்றும் நன்னிலம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.P.தமிழ்மாறன் ஆகியோர் உடனிருந்தார்கள்