திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரவுண்டானாவில் வாகனப் போக்குவரத்தை சரி செய்யும் வகையில் திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் திரு.M.S முத்துசாமி.IPS., அவர்கள் புதிதாக போக்குவரத்து சமிக்கை விளக்குகளை துவக்கி வைத்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா.IPS., அவர்களும் இருந்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இனிகோ திவ்யன் மற்றும் நகர் போக்குவரத்து ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார், காவல் நிலைய போலீஸார், மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
