சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை அம்பத்தூர் போக்குவரத்து காவல்துறை மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அம்பத்தூர் ராக்கி திரையரங்கம் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அம்பத்தூர் மேற்கு மாவட்ட போக்குவரத்து துணை ஆணையர் திரு.அசோக் குமார், அம்பத்தூர் சரக போக்குவரத்து உதவி ஆணையர் திரு.சாமுவேல் ஜெயகரன் தலைமையில்
நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கழுத்தில் தொங்கவிட்டபடி கோஷங்கள் எழுப்பினார்கள்.
நிகழச்சியில் கொரோனோ வேடமணிந்த பெண் ஒருவர் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் துண்டு பிரசுரங்களையும், முக கவசம் அணிவித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அப்போது அந்த வழியாக வந்த தமிழக அரசு மாநகர பேருந்துகளை நிறுத்தி, உள்ளே சென்ற போலீசார், முக கவசம் அணியாமல் இருந்த பயணிகளுக்கும் ஓட்டுனருக்கும் முக கவசம் வழங்கியதுடன்,
முகக் கவசத்தின் முக்கியம் குறித்தும் எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அம்பத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதவி ஆய்வாளர்கள், மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…