செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், செங்கல்பட்டு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ஆனந்தராஜு அவர்களின் தலைமையில், மகேந்திரா சிட்டியில் அமைந்துள்ள ZS தனியார் நிறுவனத்தில் கடந்த (03.02.2026) அன்று போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் போது, சாலை பாதுகாப்பு விதிகள், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதின் அவசியம், மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள், போக்குவரத்து சட்டங்களை பின்பற்றுவதின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஊழியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேலும், விபத்துகளைத் தவிர்க்க அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நிறுவன ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, போக்குவரத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பெற்றனர்.
















