சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அண்ணாசாலை பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் முககவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து அவர்களுக்கு முககவசங்களை வழங்கினார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு. அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 22.05.2020 அன்று அண்ணாசாலை ஸ்பென்சர் அருகே போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கை செய்வதை ஆய்வு செய்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி அவர்களுக்கு முககவசங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் திரு.ஏ.அருண், இ.கா.ப., இணை ஆணையாளர் (கிழக்கு) திருஆர்.சுதாகர், இ.கா.ப., இணை ஆணையாளர் (போக்குவரத்து தெற்கு) திரு.எழிலரசன், இ.கா.ப., துணை ஆணையாளர் (போக்குவரத்து கிழக்கு) திரு.பெரோஸ்கான் அப்துல்லா, இ.கா.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்

S. அதிசயராஜ்
சென்னை