சென்னை : கீழ்பாக்கம் பகுதியில் பேருந்தில் பயணித்த பெண்ணின் தங்கச்சங்கிலியை பறித்து தப்பிச் செல்ல முயன்ற நபரை துரிதமாக மடக்கிப் பிடித்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக்காவலர் R. ரியாஷ் முகமது, முதல் நிலை காவலர் M. மாதவன் மற்றும் காவலர் G. பாலமுருகன் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காவல் பணியில் காட்டிய துணிச்சல், விழிப்புணர்வு மற்றும் கடமை உணர்வை காவல் ஆணையாளர் பெரிதும் பாராட்டினார். இதுபோன்ற குற்றச் செயல்களை உடனுக்குடன் கட்டுப்படுத்தி, பொதுமக்களிடம் காவல் துறையின் மீது நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வின் போது, மூத்த காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா
















