திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்குமார் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கினார். பின்பு கொரானா இரண்டாம் அலை பரவல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் குறிப்பாக பழைய முகக்கவசங்கள் அணிவதைத் தவிர்த்து, தூய்மையான முகக்கவசங்கள் பயன்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார். அனைவருக்கும் சானிடைசர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தன்னார்வலர் பால் தாமஸ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது: பெரிய பணம் படைத்தவர்களே கூட இந்நோய் விட்டுவைப்பதில்லை. பல பிரபலங்கள் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். நாம் நோயை உதாசீனப்படுத்த கூடாது. இந்த நோய் ஏழை,பணக்காரர் என பாகுபாட்டு பார்க்காது. எப்போது வேண்டுமானாலும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். இதனால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S. ராகுல்