திருவாரூர்: (25.09.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc,(Agri)., அவர்கள் கோவில்வெண்ணி, அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் Anti Drug Club துவக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். அப்போது, பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்த கூடாதென்றும், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்து மாணவர்களாகிய நீங்கள் கல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் இளைய சமுதாயத்தினர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு தங்களின் எதிர்கால வாழ்வை தொலைத்து விடுகின்றனர்.
போதைப்பொருட்களுக்கு எதிரான உலகை அமைக்க இளைஞர்களின் பங்கு இன்றியமையாதது, மேலும் கல்லூரி மாணவ, மாணவியராகிய நீங்கள் போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழி ஏற்று கொண்டு, போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எடுத்துத்துரைக்க வேண்டும் என்றும், சாலை விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுவதால் அனைவரும் கட்டாயம் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும், இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிந்தும், நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது Seat Belt அணிந்து செல்ல வேண்டும் என்றும், இளைய சமுதாயத்தினர் (மாணவ, மாணவிகள்) தற்போது அதிக அளவில் கைப்பேசி பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, கைப்பேசியை தேவைக்கு ஏற்ப பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்கள்.
சைபர் கிரைம் சம்மந்தமான இணையவழி குற்றங்கள் குறித்தும், அடையாளம் தெரியாத நபரை சமூக வலைதளங்களில் நண்பர்களாக ஏற்க கூடாது என்றும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும், சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டதாக அறிந்தால் உடனடியாக 1930 என்ற உதவி எண் மற்றும் www.cybercrime.gov.in – ல் புகார் அளிக்குமாறு தெரிவித்தார்கள்.