திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கணவருக்கு தெரியாமல் 15 1/2 பவுன் தங்க நகைகளை அடகு வைத்து விட்டு காணாமல் போனதாக பொய் புகார் அளித்த – திருத்துறைப்பூண்டி, மேட்டுப்பாளையம், அம்மன் நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி குணசுந்தரி (வயது-42) என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்படி போலீசாரை ஏமாற்றி பொய் புகார் அளிப்பவர்கள், சாட்சிகளை கலப்பது, மோசடி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc.(Agri)., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.