திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவையும் மீறி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் நடமாடிக் கொண்டு இரு சக்கர ஊர்திகள் மூலம் வந்து செல்கின்றனர்.
இதனை கட்டுப்படுத்த கட்டுப்படுத்துவதே, அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் பொன்னேரி காவல் ஆய்வாளர் வெங்கடேசன் அத்துமீறி இரு சக்கர வாகனங்களில் வந்த நபர்களை அழைத்து அறிவுரை கூறி அனுப்பினார்.
இதேபோன்று அரசு உத்தரவை மீறி காலை 6 மணிக்குள்ளாக கடைகளை திறப்பதும் இரண்டு முப்பது மணிக்கு (2:30 pm) மேல் கடைகளை திறந்து வியாபாரம் செய்யும் வணிகர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் எச்சரிக்கை கொடுத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்