திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி உட்பட்ட மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள டி. வி. எஸ் ரெட்டி மேல்நிலைப் பள்ளியில், பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு. துரை சந்திரசேகர், ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது தலைமை ஆசிரியரிடம் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கேட்டறிந்தார். பின்பு பள்ளியில் உள்ள குடிநீர் கழிவறை வகுப்பறைகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார் மாணவர்களுக்கிடையே கேள்விகளை கேட்டு கேட்டறிந்தார். பின்பு சத்துணவு கூடத்தில் ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு உணவை தரம் பார்த்தார்.
அவருடன் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் திருமதி. ருக்மணி மோகன்ராஜ், துணைத்தலைவர் திரு. அலெக்சாண்டர், மற்றும் வார்டு கவுன்சிலர்கள் திரு. ரஜினி நக்கீரன் திருமதி. சங்கீதா சேகர் திருமதி. ஜெயலட்சுமி தன்ராஜ், திருமதி. பரிமளாஅருண்குமார், மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி அவருடன் ஆசிரியர் பெருமக்கள் பலர் உடன் இருந்தனர் பின்பு தலைமை ஆசிரியர் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தார் தலைமை ஆசிரியரின் கோரிக்கை ஏற்று பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு