திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் காவல்துறை பொன்னேரி உட்கோட்ட சோழவரம் காவல் நிலையம் சார்பில் சிறுவர்களுக்கான பாய்ஸ் கிளப் துவக்க விழா பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் தலைமையில் ஆட்ட தாங்கல் கிராமத்தில் அரசு பள்ளியில் நடைபெற்றது. இதில் பேசிய டிஎஸ்பி சிறுவர்களை நல்வழிப்படுத்துவது, புத்தகம் படிக்க வைப்பது, செல்போனின் தீமைகள் குறித்தும், பெற்றோர்கள் பிள்ளைகளிடத்தில் எப்படி நடந்து கொள்வதென்றும், எடுத்துரைத்தார். துவக்க விழாவில் சோழவரம் காவல் ஆய்வாளர் திரு.நாகலிங்கம் காவலர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பொது மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தலைக்கவசம் உயிர்க்கவசம், வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிய வேண்டும், சாலை போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும், வாகனத்தில் செல்லும் போது கைபேசியை பயன்படுத்தக் கூடாது என்பதை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் குடும்ப வன்முறை, வரதட்சனை, பணியிடத்தில் பெண்களுக்கான பாலியல் தொல்லை, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்