திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த உத்தண்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்த முனி நாதன் (51) விவசாயி என்பவர் நேற்று மாலை தனது மைத்துனருக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னை சுகம் மருத்துவமனைக்கு சென்று இரவு 11 மணியளவில் தன்னுடைய வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்னாடி கதவு உடைக்கப்பட்டு 200 சவரன் நகையும் 6 கிலோ வெள்ளியும் ஒன்றரை லட்சம் பணம் கொள்ளை போய் உள்ள நிலையில் பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர் மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன்் உத்தரவின் பேரில் பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் தலைமையில் இரண்டு தனிப்படைகள்் அமைத்து பொன்னேரி ஆய்வாளர் வெங்கடேசன் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் மற்றும் மீஞ்சூர் ஆய்வாளர் மதியரசன் உதவி ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் போலீசார் ஆகியோர் அடங்கிய இரண்டு தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்