திருவள்ளூர்: திருவள்ளூர், பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு சாலை குண்னமஞ்சேரி கிராமத்திலுள்ள முள் புதர் ஒன்றில் இருந்து முனங்கல் சத்தம். வருவதை அறிந்து அப்பகுதியை சேர்ந்த சிலர் அங்கு சென்று பார்த்தபோது 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கேட்பாரற்ற நிலையில் நடக்கக் கூட முடியாத நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல்துறையினர் அந்த மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மூதாட்டியிடம் நடத்திய விசாரணையில் தனது பெயர் காந்திமதி சொந்த ஊர் மணலி சேக்காடு என்றும் கணவர் பெயர் ராதாகிருஷ்ணன், தனக்கு ரவி, சங்கர் என்ற இரு மகன்கள் உள்ளதாகவும் இருவரும் கூலி வேலை செய்வதாகவும் தெரிவித்த அவர். தனது பிள்ளைகள் தன்னை சரிவர கவனிக்கவில்லை என்றும் தான் இருப்பதே பாரமாக கருதி தனது இரண்டாவது மகன் சங்கர் இருசக்கர ஊர்தியில் அழைத்து வந்து ஆள் நடமாட்டம் இல்லாத முள் புதரில் தன்னை தள்ளிவிட்டு சென்றதாக வேதனையுடன் கூறினார். பெற்ற தாயை அரவணைக்காமல் இறக்கமின்றி மகனே அவரை முள் புதரில் வீசி விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதனிடையே மூதாட்டியை ஆம்புலன்ஸில் காவல் துறையினர் ஏற்றி முதலுதவி செய்து உதவிய பொன்னேரி காவல் துறையை பொது மக்கள் பெரிதும் பாராட்டினர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்