திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவின்குமார். பழவேற்காடு அடுத்த கோட்டைகுப்பத்தை சேர்ந்தவர் சிவரஞ்சனி(23) இருவரும் படிக்கும்போதே காதலித்து வந்த நிலையில், கடந்த 5, 12, 2018 வருடத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டு, திருப் பாலைவனத்தில் வசித்து வந்தனர்.
பிரவீன் குமார் மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருவதாகவும், அடிக்கடி குடித்துவிட்டு சண்டை போட்டு வரதட்சணைக் கேட்டு துன்புறுத்துவதாகவும், இதனால் தீபாவளிக்கு வீட்டிற்கு வந்த மகள் தனது கணவர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றதாகவும், நேற்று இறந்து விட்டதாக அருகிலுள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். தனது மகளின் இடது கை கழுத்து கன்னம் ஆகியவற்றில் ரத்த கசிவுடன் இறந்து கிடப்பதை கண்ட பெண்ணின் தந்தை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். தனது மக்களின் இறப்பிற்கு காரணம் வரதட்சணைை கொடுமை என பெண்ணின் தந்தை திருப்பாலைவனம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் குற்றவாளியான பிரவீன் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றார்.
திருவள்ளூரிலிருந்து நமது நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்