திருவள்ளூர் : பொன்னேரியில் பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள மளிகை கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து பொன்னேரி காவல் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மளிகை கடை ஒன்றில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 1லட்சம் மதிப்புள்ள 80 பண்டல்களை பறிமுதல் செய்த போலீசார் முத்து என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேசன், கொரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்து, கடந்த வாரம் மீண்டும் பணியில் இணைந்தார். இவரை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன் ஐபிஎஸ் உட்பட காவல்துறையினர், வாழ்த்தி வரவேற்றனர்.
இந்நிலையில் நேற்று காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேசன் தலைமையிலான காவல்துறையினர், குட்கா விற்பனைக்கு எதிரான சோதனையில், ஒரு லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்துள்ளது, அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றுள்ளது. காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேசன் அவர்களின் துடிப்பும், குற்றங்களில் விரைந்து செயல்பட்டும் திறனும், பொன்னேரி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேசன் பொன்னேரி மக்களின் அரணாக திகழ்கின்றார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்