திருவள்ளூர் : திருவள்ளூர் , பொன்னேரி அடுத்த சின்னகாவனம் பகுதியை சேர்ந்தவர் தேவி (48) இவர் பொன்னேரி முத்தூட் பைனான்ஸில் வார கடன் வாங்கியுள்ளார். பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் வேலுமணி (27) இவர் முத்தூட் பைனான்ஸில் கடன் வசூலிக்கும் பிரிவில் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று தேவியின் வீட்டிற்கு சென்று பணத்தை கட்டுமாறு கேட்டதற்கு அடுத்த வாரம் கட்டுகிறேன் என்று கூறியவுடன், இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டி, தேவியை கீழே தள்ளிவிட்டு, கொலை மிரட்டல் கொடுத்ததின் பேரில், பொன்னேரி போலீசில் தேவி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, காவல் ஆய்வாளர் வெங்கடேசன், உதவி ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் வேலுமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்