திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் நடந்த கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஏற்பாட்டில் கோபாலசமுத்திரம்,கொத்தங்குளம், செங்குளம்காலனி பகுதிகளை சேர்ந்த .
ஊர் பொதுமக்களுக்கு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சமூக நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அப்போது பொது மக்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சமூக நல்லிணக்கம் குறித்தும் சமூகத்தின் ஒற்றுமையை பேணுதல் குறித்தும்,ஜாதி ரீதியான உயர்வு தாழ்வுகளை களைவதற்கு அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து செயல்படவும் சமூக வேறுபாடுகளினால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாதிப்புகளையும், அதனால் ஒவ்வொரு சமூகத்தில் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள் குறித்தும் தெளிவாக எடுத்துக் கூறினார்.
மேலும் இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.