பெரம்பலூர்: தமிழக காவல்துறை இயக்குநர் திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி திருச்சி மண்டல காவல்துறை துணைத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களின் வழிக்காட்டுதலின்படி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.சரவண சுந்தர் இ.கா.ப அவர்கள் இன்று 01.10.2021-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள் தங்களது குறைகளை எளிதாக காவல்துறையினரிடம் தெரிய படுத்தவும், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் நடைப்பெறாமல் தடுக்கவும்,
கிராமப்புறங்களில் குற்றம் நடைப்பெறாமல் இருக்கவும், பொது மக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையிலும், காவல்துறையினரில் செயல்பாடுகள் அமையும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பகல் மற்றும் இரவு என 24 மணிநேரமும் காவல்துறையினர் ரோந்து அலுவலில் ஈடுபடும் வகையில் காவலர் பீட் முறையை மாலை 04.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவகத்தில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.சரவணசுந்தர் இ.கா.ப அவர்கள் தொடங்கி வைத்தார்.
*இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ஆரோக்கியபிரகாசம், திருமதி.சுஜாதா, திரு.பாண்டியன், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.மனோகரன், திரு.சுப்பாராமன், திரு.சஞ்சீவ்குமார் மற்றும் திருமதி.மதுமதி, காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர் என அனைவரும் கலந்து கொண்டனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை