கோவை : தமிழகத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் கோவை இரண்டாவது இடத்தில் உள்ளது. கோவை அவனாசி சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதால் சாலையைக் கடக்க பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் சிரமமாக இருப்பதை அறிந்து அவிநாசி சாலையில் தனியார் மருத்துவமனை (KMCH) முன்பு கோவை மாநகர ஆணையாளர் திரு*V. பாலகிருஷ்ணன் அவர்கள் தானியங்கி சிக்னலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கே எம் சி ஹெச் மருத்துவமனை தலைவர் *அருண் பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் E2 காவல் நிலைய ஆய்வாளர் கந்தசாமி மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்