கோவை : கோவை மாநகரம் பி1 கடைவீதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரண்டு கோயில்கள் முன்பு அடையாளம் தெரியாத நபர் இறைச்சியை வைத்து விட்டு சென்றதாக, கோயில்களின் நிர்வாக அறங்காவலர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இச்சம்பவம் கோவை மாநகரின் பொது அமைதிக்கு எதிரான செயல் என்பதால், உடனடியாக கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண் அவர்களின் ஆணைப்படி, சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர் அவர்களின் தலைமையில், குற்றவாளியை கண்டு பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற 29/05/ 2020 ஆம் தேதி, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான ராம்பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மேற்கண்ட குற்றவாளியை விரைவாக கைது செய்த, கோவை மாநகர காவல் துறையினருக்கு, தமிழக அளவில் நற்பெயரை பெற்றுக்கொடுத்த தனிப்படையினர் கோவை மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாகப் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்