திருநெல்வேலி: திருநெல்வேலிமாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS, அவர்களின் அறிவுரையின்படி வள்ளியூர் காவல் ஆய்வாளர் திரு சுரேஷ்குமார் அவர்கள் தலைமையில் வள்ளியூர் காவல்துறையினர் ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு கொரோனோ வைரஸ் நோய்த்தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவுவதை தடுக்க கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றி வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும், முக கவசம் அணிவதன் அவசியத்தையும் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துவது குறித்தும்,அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் தொற்று குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பொதுமக்களுக்கு ஹோமியோபதி மாத்திரை வழங்கப்பட்டது.மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த காவல் துறைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.