சென்னை: புனித தோமையர் மலை எஸ் 7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி என்பதால் பொதுமக்கள் துணி கடை களிலும் நகைக் கடைகளிலும், சமூக இடைவெளியை கடை பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும்,கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ஹரி தாஸ் தலைமையில் காமாட்சி மருத்துவமனை சிக்னலில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், முகக்கவசம் அணிய வேண்டும்,
சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்,கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டியது இதுகுறித்து துண்டுப்பிரசுரங்கள் வழங்கியும்,கொரோனா விழிப்புணர்வு பாடல்கள் மூலம் நடன கலைஞர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தி எடுத்துரைத்தார்.
இருசக்கர வாகனங்களில் வருவோர் அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் என முக கவசம் அணியாதவர்களுக்கு காவல் ஆய்வாளர் திரு.ஹரிதாஸ் முகக் கவசம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கி எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து மேடவாக்கத்தில் உள்ள ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் துணி கடை வாயிலில் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரம் முகக் கவசம் வழங்கினார் உடன் காவல் உதவி ஆய்வாளர்கள்,தலைமை காவலர்கள்,காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.