திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடையே நல்லுறவை மேம்படுத்தவும், காவல்துறையின்மீது பொதுமக்களுக்கு உள்ள அச்சத்தை போக்கும் விதமாகவும்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று (23.07.21) காலை பொதுமக்கள் மற்றும் காவலர்கள் பங்குபெற்ற
கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் போட்டியை துவங்கிவைத்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் விளையாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்கள்.