மதுரை : மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் உத்தரவுப்படி காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு மேம்படவும், மதுரை மாநகரில் நடைபெறும் குற்றங்களை குறைத்திடவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுத்திடவும், மதுரை மாநகரில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும்100 வார்டு பொருப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பொதுமக்களுடன் இணைந்து புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று (02.01.2020) மதுரை மாநகர் அண்ணாநகர் சட்டம் & ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திருமதி.லில்லி கிரேஸ் அவர்கள் தலைமையில், அண்ணாநகர் (ச&ஒ) காவல் ஆய்வாளர் திரு.ரமணி அவர்கள் முன்னிலையில் அண்ணாநகர் பாய்ஸ் கிளப் நண்பர்களுடன் மதுரை அண்ணாநகர் சரகத்திற்குட்பட்ட கரும்பாலை பகுதியில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டு தினத்தை கொண்டாடினர்.
மேலும் குழந்தைகளுக்கு கதை, கவிதை, கட்டுரை, ஓவியம் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு காவல் உதவி ஆணையர் அவர்கள் பரிசுகள் வழங்கி பொதுமக்களுக்கு அவசர காலங்களில் தமிழ்நாடு காவல்துறையின் காவலன் SOS செயலியின் பயன்பாடு மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறை பற்றியும் விரிவாக விளக்கம் அளித்தார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை